இணையவழி நடக்கும் குற்றங்களில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியல் : இந்தியாவிற்க்கு 3வது இடம்..!!அதிர்ச்சி ரிப்போட்..!
தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு ஆதாயங்களை பெற்றிருந்தாலும் அதற்கு ஆபத்தான மறுபக்கமும் இருக்கிறது. சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வழி பயன்பாட்டின் மூலமாக பல்வேறு சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவைகளை சமீபகாலமாக ஆர்.எஸ்.ஏ தொழில்நுட்ப நிறுவனம் அளித்து வருகிறது.
இணையதள தகவல் திருட்டு, செல்போன்களில் வைரஸ் பரப்புவது, இணையவழி நிதி மோசடி உள்ளிட்டவை பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. அதில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த நாடுகளின் பட்டியலை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், கனடா மற்றும் அமெரிக்கா முதல் இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. அடுத்ததாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10-25 வயதுடையவர்களை தற்கொலை செய்ய தூண்டி பலரின் இறப்புகளுக்கு காரணமான ப்ளூ வேல் எனும் விளையாட்டு இணையத்தின் வழி பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்