மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்புடன் தனது ஒப்பந்தத்தை முடித்து விலகிய ரொனால்டோ.!
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிலிருந்து தன் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு விலகியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் கிளப் அணியிடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ரொனால்டோ விலகியுள்ளார். ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் குறித்து ஒரு நேர்காணலில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து தற்போது பரஸ்பர உடன்பாடு மூலம் வெளியேறினார்.
இது குறித்து ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற உள்ளார். ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 போட்டிகளில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளது.
ரொனால்டோ இது குறித்து பேசும்போது மான்செஸ்டர் யுனைடெட் உடனான உரையாடலைத் தொடர்ந்து, எங்கள் ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க பரஸ்பரம் ஒப்புக்கொண்டோம். நான் மான்செஸ்டர் யுனைடெட்டை நேசிக்கிறேன், ரசிகர்களையும் நேசிக்கிறேன், அது எப்போதும் மாறாது. இருப்பினும், நான் ஒரு புதிய சவாலைத் தேடுவதற்கு இது சரியான நேரம் என உணர்கிறேன் என்று கூறினார்.