யோவ் சும்மா இருயா…’வாரிசு’ நடன இயக்குனரால் கடிந்து கொண்ட தமன்.!

Default Image

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி வருகிறார்.

Varisu First Single
Varisu First Single [Image Source: Twitter ]

படத்திற்கான முதல் பாடல் ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று லைக்குகளை குவித்து வருகிறது. விரைவில் படத்தின் இரண்டாவது பாடலும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அந்த பாடலை கேட்க ஆவலுடன் காத்துள்ளனர்.


இந்நிலையில்,  நடன இயக்குனர் ஜானி தனது ட்வீட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியீட்டு வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் குறித்து பதிவிட்டுள்ளார். ” விஜய்யிடமிருந்து மேலும் ஒரு சார்ட்பஸ்டர் ஏற்றப்படுகிறது இயக்குனர் வம்சி சாரின் வாரிசு படம் பெல்லாரியின் அழகிய இடங்களில் படமாக்கப்பட்டது. மிகவும் வரவேற்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் இந்த அன்பான மக்களுக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை உயர்வாக வைத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த இசையமைப்பாளர் தமன் “யோவ் கொஞ்சம் சும்மா இருயா…நீ கொடுக்கிற எதிர்பரப்பு எனக்கு அழுத்தமாக இருக்கிறது” என செல்லமாக கடிந்துகொண்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்