இன்று 71,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி ரோஸ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் ரோச்கார் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக இன்று 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகளை வழங்க உள்ளார். நாடு முழுவதும் 45 இடங்களில் புதிய பணியாளர்களை வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.