அதிமுகவை ஓபிஎஸ் மீட்டெடுப்பார் – புகழேந்தி
ஓபிஎஸ் அதிமுகவை ஜெயலலிதா வழியில் மீட்டெடுத்து, மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் உள்ளது என புகழேந்தி பேட்டி.
ஓபிஎஸ் கடந்த 3 நாட்களாக பெரியகுளம் பண்ணை வீட்டில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். நேற்று கரூர், சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ சந்தித்தனர்.
இந்த நிகழ்வின் போது, பொதுக்குழுவை கூட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, ஓபிஎஸ் அதிமுகவை ஜெயலலிதா வழியில் மீட்டெடுத்து, மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.