மங்களூரு குண்டு வெடிப்பு.! விசாரணை குறித்து பரவிய தவறான தகவல்.! வெளியான உண்மை நிலவரம்.!

Default Image

மங்களூரு குக்கர் வெடிப்பு  சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல்.

2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில்  குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குக்கர் வெடிப்பு  சம்பந்தமாக கர்நாடக ஏடிஜிபி பேசுகையில் இந்த சம்பவம் தொடர்பாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான விசாரணைக்கு தமிழக காவல்துறை கர்நாடக செல்வதாகவும், கர்நாடக காவல் துறை தமிழகம் வருவதாகவும் தகவல் ஒன்று பரவியது. ஆனால் இது தவறான தகவல் என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்