சிறுவன் உட்பட 14 மீனவர்களை விடுவித்த இலங்கை நீதிமன்றம்..!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட 14 காரைக்கால் மீனவர்களை விடுதலை
சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 14ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட 14 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.