ஏடிபி பட்டத்தை 6வது முறையாக தட்டி சென்ற ஜோகோவிச்.! ரோஜர் பெடரரின் சாதனை சமன் செய்து அசத்தல்.!

Default Image

ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று  ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.  

தனது கடினமான ஓராண்டிற்கு பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்வது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்று போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார்.

21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட் க்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்தார்.

இதன் மூலம் நோவாக் ஜோகோவிச், ஆறு முறை ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜோகோவிச், பரிசுத்தொகையாக $4.7 மில்லியன்(இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்