வசூலில் மாஸ் காட்டும் ‘யசோதா’….பாக்ஸ் ஆபிஸ் குயின் சமந்தா தான்.!

Default Image

நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Yashoda
Yashoda [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

Yashoda
Yashoda [Image Source: Twitter ]

விமர்சன ரீதியாக ஒரு பக்கம் படம் வெற்றியடைந்துவரும் நிலையில், வசூல் ரீதியாக மற்றோரு பக்கம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில், வெளியான 9 நாட்களில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- வாரிசு படத்தை மரியாதையா ரிலீஸ் பண்ணுங்க…கஞ்சா கருப்பு ஆவேசம்.!

Yashoda
Yashoda [Image Source: Twitter ]

அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் 34 கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வெளியான 9 நாளில் 34 கோடிகள் வசூலை குவித்துள்ளதால், சமந்தா ரசிகர்கள் அவரை ‘பாக்ஸ் ஆபிஸ் குயின்’ என கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala