இன்று ரசிகர்களை சந்திக்கிறார் தளபதி விஜய்…!
நடிகர் விஜய் இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.