கனமழை எச்சரிக்கை – மாவட்டம் நிர்வாகங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தமிழக அரசு சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.அடுத்து வரும் நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையானது, வலுவடைந்து தமிழக மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.