ஐயோ..நடிகர் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!
1990-காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் அப்பாஸ் பெரிதாக சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே நடிப்பை நிறுத்திவிட்டார். பிறகு இப்போது என்னதான் செய்கிறார், ஏதேனும் படங்களில் நடிக்கிறாரா..? என்கிற அளவிற்கு ஆளே காணாமல் போய்விட்டார் என்று கூறலாம்.
இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்பாஸின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாஸுக்கு என்ன ஆச்சு..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- பாபி சிம்ஹா இருந்தால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்… அந்தர் பல்டி அடித்த சிவகார்திகேயன்.!
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காரணம் என்னவென்றால், சில தினங்களுக்கு முன்பு முட்டியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் அதற்காக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்களை தான் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியது “நான் மருத்துவமனையில் இருக்கும்போது என்னுடைய கவலைகள் ரொம்ப ரொம்ப மோசமாக இருந்தது. ஆனால், நான் அங்கு இருந்தபோது சில பயங்களை சமாளிக்க முயற்சி செய்தேன். என்னுடைய மனதை நான் மேம்படுத்த முயற்சித்தேன். என்னுடைய அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. விரைவில் வீடு திரும்பஉள்ளேன். நீங்கள் செய்த பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.