காசி தமிழ் சங்கமம் விழா தொடக்கம்..! பிரதமர் மோடியை பாராட்டிய இளையராஜா..!
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியது எண்ணி நான் வியக்கிறேன் என பிரதமர் மோடியை பாராட்டி இளையராஜா பேச்சு.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனராஸ் பல்கலைக்கழகத்தில், காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டுள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஐஐடி இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு காசிக்கும் தமிழுக்கும் உள்ள பழமையான தொடர்பை உணர்த்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இளையராஜா, பெருமை மிக்க காசியில் பாரதியார் இறந்த ஆண்டுகள் தங்கி இருந்தார். தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசியில் நடத்த பிரதமர் மோடி எண்ணியது எண்ணி நான் வியக்கிறேன் என பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.