தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்பு
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும், 21, 22 ஆம் தேதியில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில் இரண்டு நாளும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சூறாவளிக்காற்று வீசும் என்பதால் 23-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.