கால்நடை மருத்துவர்களுக்கு அரசுப்பணி – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி.
டிஎன்பிஎஸ்சி அரசு பணி குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது கால்நடை மருத்துவர்களுக்கான அரசுப்பணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணிக்கான தேர்வு, அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி அன்று நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டிசம்பர் 17ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.