வன்னியர் சங்கத் தலைவர்-காடுவெட்டி குரு உடம்நலக்குறைவால் காலமானார்..!!
வன்னியர் சங்கத் தலைவரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார். இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரது உடல் பதப்படுத்தப்பட்ட பின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கட்சித் தொண்டர்கள் அஞ்சலிக்குப் பின், காடுவெட்டி குருவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு, 2001 மற்றும் 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாமக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்றவர்.
காடுவெட்டி குரு மறைவு குறித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், கடைசி வரை தனது நம்பிக்கைக்குரிய தளபதியாக காடுவெட்டி குரு திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்கப் பாடுபட்டதாகவும், தன்னை அழைத்து ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்ததாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்