4 பேர் உயிரிழப்பு.! 15 நாட்களுக்குள் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு.!
கட்டடம் கட்டும் போது செப்டிக் டேங்கில் இருந்து விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த சம்பந்தப்பட்ட கட்டடம் முழுதாக இடிக்க கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , அதன் உள்ளே இருக்கும் சவுக்கு கம்புகளை அவிழ்க்க, உள்ளே சென்ற தொழிலாளர்கள் 4 பேர் உள்ளே விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து , பாதுகாப்பு இன்றி கட்டடம் காட்டிய உரிமையாளர் வழக்கறிஞர் குணசேகரன், மேஸ்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த கட்டடத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கட்டட வேலைகளை நிறுத்த வேண்டும் எனவும், 15 நாட்களுக்குள் புதிய கட்டடம் முழுவதும் இடிக்க வேண்டும் எனவும் கரூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.