கனமழையால் வந்த சோதனை…கடும் வருத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி.?
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்”.இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். நேற்று படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ் அறிவித்திருந்தது.
இதையும் படியுங்களேன்- எனக்கு மட்டும் தொடர்ந்து 21 மணிநேரம்.. ரொம்ப கஷ்டமா இருந்தது…லவ் டுடே நாயகி வருத்தம்.!
பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏனெனில், சென்னையில் மிகவும் கனமழை வெளுத்து வாங்கியுள்ளதால் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம். இதனால் ரஜினி சற்று சோகத்தில் இருந்தாராம். இதனையடுத்து இன்றும் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.