தமிழ்நாடு:விழுப்புரம், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு… !!
விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
விழுப்புரத்திலிருந்து சென்னை வந்த அரசுப் பேருந்தை, வழுதரெட்டி என்ற இடத்தில் மர்ம நபர்கள் தாக்கியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து வந்த அரசு பேருந்தும், பண்ருட்டிக்கு சென்ற தனியார் பேருந்தும் கல்வீச்சில் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 7 பேருந்துகள் கல்வீச்சில் சேதமடைந்தன.
கல்வீச்சுச் சம்பவங்கள் தொடர்ந்ததால் அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்குத் திரும்பிச் சென்றன. விழுப்புரத்தில் இருந்து புதுவை, திருக்கோவிலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு பேருந்து இல்லாத காரணத்தால் பயணிகள் பேருந்து நிலையத்திலேயே விடிய விடியக் காத்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பேருந்துகள் மீது கல்வீச்சுச் சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்