இந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது – அண்ணாமலை
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்வீட்.
கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில், ‘கரூர் அடுத்த சுக்காலியூரில் புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஒன்றில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி நான்கு கட்டிடத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த மன வேதனை அளிக்கிறது.
கட்டிட வேலையின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தேவையினை இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது. இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!’ என பதிவிட்டுள்ளார்.
கட்டிட வேலையின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான தேவையினை இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.
இறந்தவர்கள் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி! (2/2)
— K.Annamalai (@annamalai_k) November 17, 2022