ஜம்மு-காஷ்மீர்:எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.. !ராணுவம் அதிரடி..!
ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர், அடிக்கடி அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் குப்வாரா மாவட்டத்தின் தாங்தார் ((Tangdhar)) கிராமத்தை ஒட்டிய வனப்பகுதி வழியாக, தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவ முயன்றுள்ளனர். இதை கண்டறிந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தியதால், அதிகாலையில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சண்டையில் 5 தீவிரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், முன்கூட்டியே நள்ளிரவு நேரத்தில் மேலும் சில தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என கருதும் ராணுவத்தினர், தாங்தார் கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்