BREAKING : உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கால்பந்து வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்று, அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண நிதி, அரசு வேலை ஆகியவற்றிற்கான ஆணையை வழங்கினார். அதனை தொடர்ந்து, அவர்களது வீட்டில் இருந்த புகைப்படங்களை பார்த்து, பிரியா பெற்ற பரிசுகள் பற்றி கேட்டறிந்தார்.