2024 – ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி..! அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது..! – ஈபிஎஸ்
அமீத்ஷா வந்தாலோ, பிரதமர் மோடி வந்தாலோ,ஏன் நான் சென்று பார்க்கவில்லை என தவறான பரப்புரையை பத்திரிகைகள் பரப்புகின்றது என ஈபிஎஸ் பேட்டி.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சீர்காழியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “பூம்புகார்,தரங்கம்பாடி பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.30,000 வழங்க வேண்டும்.
அரசு கவனமாக செயல்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பயிர்காப்பீடு செய்யும் காலத்தை நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக என்பது ஒரு பிரதான எதிர்கட்சி.பாஜக தேசிய கட்சி. அமீத்ஷா வந்தாலோ, பிரதமர் மோடி வந்தாலோ,ஏன் நான் சென்று பார்க்கவில்லை என தவறான பரப்புரையை பத்திரிகைகள் பரப்புகின்றது. 2024 – ல் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். அதில் அமமுக- விற்கு 1 % கூட இடம் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.