விரைவில் ஓசூரில் மிகப்பெரிய ஐ-போன் உற்பத்தி ஆலை.! 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு.!

Default Image

60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் அமைகிறது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் ஓசூரில் தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரமாண்டமான தொழிற்சாலையை ஓசூரில் அமைக்கிறது டாடா குழுமம். ஓசூரில் அமையவுள்ள மிகப்பெரிய ஐபோன் தயரிப்பு புதிய ஆலையில் 3 மாதங்களில் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயரிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை சீனாவில் மூடப்படுவதால் இந்தியாவில் புதிய ஆலை தொடங்கப்படுகிறது. ஐ-போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனமும் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஐ-போன் தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத்தியை 2 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேலும் 53,000 பேரை பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

ஃபாக்ஸ்கான், ஸ்பெகட்ரான், விஸ்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஐ-போன்களை தயாரித்து வருகின்றன. தற்போது பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் நிறுவனம், ஓசூரில் தனது ஆலையை தொடங்குவதாக தகவல் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் நகரமான ஓசூரில் பெரும் முதலீடு செய்கிறது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்