உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு வீடு வழங்க தமிழக அரசு ஏற்பாடு..!
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக, 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.