பேட்மின்டன் வேர்ல்ட் டூர் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து மாற்றம்.!

Default Image

உலக பேட்மின்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக சீனாவிலிருந்து பேங்காக் கிற்கு மாற்றம்.

உலக பேட்மின்டன் வேர்ல்ட் டூர் ஃபைனல்ஸ்(BWF World Tour Finals) போட்டிகள் சீனாவின் குவாங்சோ விலிருந்து தாய்லாந்து நாட்டின் பேங்காக் கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக உலக பேட்மின்டன் பெடரேஷன் தெரிவித்துள்ளது.

தற்போது சீனாவில் கொரோனா பரவல் சூழ்நிலை காரணமாக, உலக பேட்மின்டன் பெடரேஷன், சீன பேட்மின்டன் அமைப்புடன் பேசி இதற்கு ஒத்துழைத்து இந்த போட்டிகள் சீனாவின் குவாங்சோ விலிருந்து பேங்காக் கிற்கு மாற்றப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டிருந்த நாளுக்கு ஒருவாரத்திற்கு முன்னதாக டிச 7 முதல் 11 வரை, இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானத்தில் டிச 7 முதல் 11 வரை வேறு எந்தவித போட்டிகளும் என்பதால் அந்த வாரத்தில் இந்த போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக தாய்லாந்து பேட்மின்டன் அமைப்பிற்கு உலக பேட்மின்டன் பெடரேஷன் நன்றி தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்