கல்யாணத்துக்கு முன்னாடி அது தான் ஃபர்ஸ்ட்.! அதிரடி முடிவு எடுத்த ஹன்ஷிகா.! வெளியான சீக்ரெட் தகவல்….

Default Image

நடிகை ஹன்சிகா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொழிலதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹன்சிகா வெளியீட்டு திருமணம் நடைபெறவிருப்பதை உறுதி செய்தார்.

Hansika Motwani And Sohael Khaturiya
Hansika Motwani And Sohael Khaturiya [Image Source: Twitter]

இதனையடுத்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருமணத்திற்கு முன்பு நடைபெறவுள்ள சில சுவாரஷியமான தகவல்கள் கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஹன்சிகா -சோஹைல் திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளதாம். திருமணத்திற்கு முன்பு அதாவது டிசம்பர்- 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரியுடன் திருமண விழா தொடங்கப்படவுள்ளதாம்.

Hansika Motwani And Sohael Khaturiya
Hansika Motwani And Sohael Khaturiya [Image Source: Twitter]

இதனை தொடர்ந்து, அடுத்த நாளான டிசம்பர் 3-ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வும் நடைபெறவுள்ளதாம். பிறகு, அடுத்த நாள் காலை ஹல்டி நிகழ்வு நடக்க இருக்கும் நிலையில், அன்றைய தினம் மாலை (டிசம்பர் 4) ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான  அரண்மனையில் வைத்து திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

hansika wedding
Hansika Motwani And Sohael Khaturiya [Image Source: Twitter]

மேலும், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் அரண்மையில் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், திருமணத்திற்கான அழைப்பிதழ் செய்யப்பட்டும் வருகிறதாம். திருமணம் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதால் பல சினிமா பிரபலங்கள் இவர்களது திருமணத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்