பிக் பாஸ் வீட்டில் பாதியில் வெளியேறினாலும் பல லட்சங்களை அள்ளிய விஜே.மகேஸ்வரி.!

தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறினார்.

Vj Maheswari Bigg Boss
Vj Maheswari Bigg Boss [Image Source: Twitter ]

வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் விஜே மகேஸ்வரி நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ” பிக் பாஸ் 6-ல் இருந்து வெளியேற்றப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது 100% விளையாட்டை கொடுத்தேன்.வெளியே வந்தவுடன், எனக்கு எவ்வளவு ஆதரவு இருந்தது என்பதை உணர்ந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.

Vj Maheswari Bigg Boss
Vj Maheswari Bigg Boss [Image Source: Twitter ]

அவருடைய ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்,  இன்னும் கொஞ்ச நாட்கள் மகேஸ்வரி வீட்டில் இருந்திருக்கலாம் என்பது தான். மேலும் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்பபோம்.

இதையும் படியுங்களேன்- லவ் டுடே தயாரிப்பாளருக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்… 10 நாளில் 50 கோடி.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.?

Vj Maheswari Bigg Boss
Vj Maheswari Bigg Boss [Image Source: Twitter ]

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் 35 நாட்கள் இருந்த அவர் இந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக 8 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.ஒரு நாளைக்கு 23 ஆயிரம் என்ற கணக்கில்  அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment