காதலியை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த காதலன்..! நடந்தது என்ன..?

Default Image

திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன். 

மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தப் அமீன் பூனாவாலா. இவர் பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றி வந்த ஷ்ரத்தா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதனை எடுத்து இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டாரின் எதிர்ப்பை தொடர்ந்து,  இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே டெல்லியில்  மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், ஷ்ரத்தா தனது குடும்பத்தினருடனான அனைத்து தொடர்பையும் துண்டித்துள்ளார்.

இந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பலமுறை அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொள்ள நினைத்தும் தொடர்பு கொள்ள இயலாமல் போனது. இதனை தொடர்ந்து ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் மதன், சமூக வலைதளத்தின் மூலம் ஷ்ரத்தா மற்றும் அஃப்தப் இருக்கும் முகவரியை கண்டறிந்து அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

ஆனால் அவர்கள் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அஃப்தபிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  அஃப்தாப், ஷ்ரத்தாவை  திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் ஆனால் அவர் சம்மதிக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும்,  இதனால் கடந்த மே 18-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அஃப்தாப், ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த்தாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். அதன்பின் உடலின் ஒவ்வொரு பாகங்களையும் கொண்டு டெல்லி முழுவதும் பல இடங்களில் வீசியுள்ளார்.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஷ்ரத்தாவின் உடல்பாகங்களை காவல்துறையினர்  தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்