நாட்டின் மொத்த விலை பணவீக்கம் குறைந்தது – மத்திய அரசு அறிவிப்பு
கச்சா எண்ணெய், உணவு பொருள்களின் விலை குறைந்ததால் அக்டோபரில் பணவீக்கம் விகிதம் குறைவு என தகவல்.
நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் விகிதம் அக்டோபர் மாதம் 8.39% ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பரில் 10.7% ஆக இருந்த மொத்தவிலை பணவீக்கம் விகிதம் அக்டோபரில் 2.31% குறைந்து 8.39% ஆக உள்ளது. அடிப்படை உலோகங்கள், கச்சா எண்ணெய், உணவு பொருள்களின் விலை குறைந்ததால் அக்டோபரில் பணவீக்கம் விகிதம் குறைந்துள்ளது.
செப்டம்பரை விட அக்டோபரில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விலையும் குறைந்ததால் பணவீக்கம் விகிதம் குறைவு என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, நாட்டின் சில்லறை பணவீக்கம் விகிதம் அக்டோபரில் 6.77% ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பரில் 7.41% ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபரில் 0.64% குறைந்து 6.77% ஆக உள்ளது. நகர்புறத்தில் 6.5% ஆக உள்ள சில்லறை பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் 0.5% ஆக உயர்ந்து 7% ஆக உள்ளது.