தூத்துக்குடி:பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு..!!

Default Image

தூத்துக்குடியில் பதற்றம் மிக்க பகுதிகளை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையை ஒட்டி உள்ள அண்ணாநகர் பகுதியில் 3 நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது. ஒன்றுக் கொன்று தொடர்புள்ள 12 நீண்ட தெருக்களைக் கொண்ட இப்பகுதியில், மர்மநபர்கள் எளிதில் ஊடுருவிப் பதுங்கி இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைக் காலம் என்பதால், 13 முதல் 17 வயதுவரை உள்ள சிறுவர்களை போராட்டக் காரர்கள் தூண்டி விட்டு பெட்ரோல் குண்டு வீச்சு, சாலைத் தடுப்புகளைச் சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட வைப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

மேலும், இணையதளங்கள் முடக்கப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் வெளியில் இருந்து வரும் நபர்கள் தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால், அந்தப் பகுதிக்குள் வெளியில் இருவந்து வந்து செல்லும் நபர்களை ஆளில்லா விமானங்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதன் படி மூன்று ஆளில்லா விமானங்கள் இந்த கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் உள்ள ஹெலிகாம் மூலம் அண்ணாநகர் பகுதியில் நடமாடும் நபர்களை எளிதில் கண்காணிக்க முடிவதாகவும் போலீசார் கூறுகின்றனர். இப்படியாக, வெளிநபர்களின் நடமாட்டத்தையும், அவர்கள் மூலம் வதந்தி பரப்பப்படுவதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பதற்றத்தைத் தணிக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்