டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு சரியா இருப்பார்! டி-20க்கு சரியா வரமாட்டார்-டேனிஸ் கனேரியா

Default Image

டி-20 போட்டிகளுக்கு பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் சரியானவர் இல்லை என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பயிற்சியளித்தார்.

இந்த தொடரில் இந்திய அணி தோற்றதற்கு பிறகு இந்திய அணி உட்பட பயிற்சியாளரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பேசியுள்ளார். இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் டிராவிட் பயிற்சியாளராக இருக்கவேண்டும் டி-20 போட்டிகளுக்கு அவர் சரியாக இருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

டி-20 போட்டிகளுக்கு ட்ராவிட்டின் பயிற்சி மனநிலை இந்திய அணி வெற்றி பெற உதவாது. ஒரு கிரிக்கெட் வீரராக டிராவிட் சிறந்தவர், ஆனால் டி-20 போட்டிகளில் பயிற்சியளிக்கும் போது அதிரடியான மனநிலை வேண்டும். அது டிராவிட்டிடம் இல்லை, அவர் ஒரு சாந்தம் மற்றும் அமைதியான கிரிக்கெட்டர். அவருக்கு டி-20களில் அழுத்தத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தெரியாது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ராகுல் டிராவிட், பல்வேறு விதமான இந்திய அணியை விளையாட வைத்து சோதனை செய்துவிட்டார், ராகுல் திவாட்டியா வுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம், அவர் ஒரு ஆல் ரௌண்டராக இருந்திருப்பார். உம்ரன் மாலிக், ஆஸ்திரேலியாவின் வேகமான மைதானங்களில் நல்ல பலன் அளித்திருப்பார்.

மொஹம்மது சிராஜ் இந்திய அணியின் ஒரு எக்ஸ் ஃபேக்டராக இருந்திருப்பார், இப்படி நிறைய இளம் வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு வழங்க வில்லை. இப்போதே நீங்கள் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அடுத்த 2024 உலகக்கோப்பை தொடருக்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்