ஐசிசி தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட கிரெக் பார்க்லே.!

Default Image

ஐசிசி தலைவராக மீண்டும் 2ஆவது முறையாக கிரெக் பார்க்லே, இரண்டு வருட காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி வாரியம், கிரெக் பார்க்லேவை இரண்டாவது முறையாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பின் இரண்டு வருட காலத்திற்கு தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. தவெங்வா முகுஹ்லானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கிரெக் பார்க்லே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த பார்க்லே நவம்பர் 2020 இல் முதன்முதலில் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். ஐசிசி தலைவராக தேர்தெடுக்கப்ட்ட பிறகு கிரெக் பார்க்லே கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது மரியாதைக்குரியது. சக ஐசிசி இயக்குநர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி கூற விரும்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் விளையாட்டுக்கான வெற்றிகரமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். கிரிக்கெட் விளையாட்டை மேலும் வலுப்படுத்தவும் உலகில் அதிகமானோரிடம் இந்த விளையாட்டை கொண்டுசெல்ல, தொடர்ந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதாக அவர் கூறினார்.

கிரெக் ஐசிசி தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு, அவருடன் போட்டியிட்ட முகுஹ்லானி, வாழ்த்துகளை தெரிவித்தார். பார்க்லே தலைமையின் தொடர்ச்சி விளையாட்டுக்கான வளர்ச்சியாக இருக்கும் என்பதால் நான் வேட்புமனுவை வாபஸ் செய்ததாக முகுஹ்லானி மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்