கும்பலால் தாக்கப்பட்ட இளைஞரை கட்டிப்பிடித்துக் காப்பாற்றிய உதவி ஆய்வாளர்..!!
உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட ((இஸ்லாமிய)) இளைஞரை, காவல் அதிகாரி ஒருவர் கட்டிப்பிடித்துக் காப்பாற்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
நைனிடால் ராம் நகரில் உள்ள ஒரு கோவில் முன்பு இளம்பெண் ஒருவருடன் ((இஸ்லாமிய)) இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர் யார் எனக் கேட்டு மிரட்டியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த பெண், அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், இளைஞரைச் சூழந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது.
இதனைக் கண்ட காவல் உதவியாளர் ககன்தீப்சிங் என்பவர், அந்த இளைஞரை மீட்க முயன்றார். இருந்தும் அந்த கும்பல் தொடர்ந்து தாக்கியதால், இளைஞரை கட்டிப்பிடித்த ககன்தீப்சிங், அவருக்கு விழுந்த அடியைத் தான் தாங்கிக் கொண்டு, அவரை அழைத்துச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்