அறங்காவலர் நியமனத்தில் அரசியல் கேள்விகள்.! உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

Default Image

அறங்காவலர்களை நியமிக்கையில் விண்ணப்பங்களில் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம்பெற வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம்.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக கோவில்களில் அறங்காவலர்  நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருந்தது.

இது தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் விசாரிக்கையில், இந்து அறநிலையத்துறை சார்பில் கூறுகையில், ‘ தற்போது 36 மாவட்டங்களில் அறங்காவலர் காலிப்பணியிடங்கள் நியமிக்கபட்டு வருகிறது. ‘ என கூறினர்.

மேலும், ‘ 10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்கள் 560 தமிழகத்தில் இருக்கின்றன. இந்த கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த 560 கோயில்களில் 8 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டு விட்டனர். அவர்களில் எந்த அரசியல் தலையீட்டும் இல்லை என விளக்கம் அளித்து இருந்தது.

இதனை அடுத்து, இனி அறங்காவலர்களை நியமிக்கையில் விண்ணப்பங்களில் அரசியல் சார்ந்த கேள்விகள் இடம்பெற வேண்டும் என உத்தரவு பிறப்பித்து வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்