ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் , ஆளுநர் ரவி, இணையமைச்சர் முருகன்.!
காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா ஒரே மேடையில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இருக்கின்றனர்.
மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்த பிரதமர் மோடி திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்க வந்துள்ளார் .
விழா நடைபெறும் பல்கலைக்கழக மேடையில் தற்போது பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் இருக்கின்றனர்.
தற்போது பல்கலைக்கழத்தில் பிரதமருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று 2,314 மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.