பெங்களூருவில் 108 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.!
பெங்களுருவில் நடப்பிரபா கெம்பகவுடாவின் 108அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
பெங்களூரு நகரை உருவாக்கியவரான நடப்பிரபா கெம்பகௌடாவின், 108 அடி வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று பெங்களுருவில் திறந்து வைத்தார். பெங்களூரு நகரை உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட கெம்பகௌடாவின் நினைவாக அவருக்கு ஸ்டேச்சு ஆஃப் பிராஸ்பெரிட்டி (Statue of Prosperity) சிலை பெங்களூரு விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
குஜராத்தில் வல்லபாய் பட்டேல்(Statue of Unity) சிலையை உருவாக்கிய ராம் V. சுட்டர் தான் இந்த சிலையையும் உருவாக்கியுள்ளார். 98 டன் வெங்கலம் மற்றும் 120 டன் இரும்பு கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக மோடி, பெங்களுருவில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தை திறந்து வைத்தார். 5000கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த 2ஆவது முனையத்தின் வழியாக 5-6 கோடி பயணிகள் வருடத்திற்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முனையத்தின் வழியில் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பசுமை பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கெம்பகவுடா விமான நிலையத்தின் 2ஆவது முனையம், உலகின் மிகப்பெரிய முனையம் என யூ.எஸ்.ஜி.பி.சி (US GBC(Green Building Council) தரச்சான்றிதழ் அளித்துள்ளது.