கோவை கார் வெடிப்பு எதிரொலி.! தமிகத்தில் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு வெகு விரைவில்…

Default Image

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் கீழ், இந்த வழக்கு, தமிழக காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது இந்த வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இதுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. இதுவரை 102 பேர் சந்தேக வளையத்திற்குள் வரவழைக்கப்பட்டு, அவர்களில் 90 நபர்களிடம் விசாரணை முழுதாக முடிந்துள்ளளது.

முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி, தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தததை அடுத்து, தற்போது அதற்கான பணிகளில் தமிழக காவல்துறை தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, உளவுத்துறையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு சந்தேக அடிப்படையில் பலரை சிறப்பு பிரிவை சேர்ந்தவர்கள் ரகசியமாக உளவு பார்த்து வருவதாகவும், அதேபோல சிபிசிஐடியில் சிறப்பு பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டு அவர்கள் சந்தேக அடிப்படையில் பலரை கண்காணித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது எனவும், அதற்கு ஐஜி அல்லது ஏடிஜிபி ஆகியோர் தலைமை வகிப்பர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்