தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி.!

Default Image

சென்னை-மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுருவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

சென்னையிலிருந்து மைசூர் வரை செல்லும் நாட்டின் 5 ஆவது மற்றும் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று பெங்களுரு கே.எஸ்.ஆர். ரயில்வே நிலையத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் முக்கிய அம்சங்களாவன,

  • கட்டணமாக 1,200 இலுருந்து 2,486 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பயண நேரம் சென்னை-மைசூரு 500 கி.மீ தொலைவை 6 மணி 30 நிமிடம் எனவும், இடையில் பெங்களூரு மற்றும் காட்பாடி நிலையத்தில் இரண்டு நிறுத்தங்களில் நிற்கும் எனவும் சனிக்கிழமையிலிருந்து வழக்கம் போல் இயங்க ஆரம்பிக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • சென்னையிலிருந்து பெங்களூரு செல்ல 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலுள்ள இன்டெக்ரல் கோச் பேக்டரி(Integral Coach Factory) இல் உருவாக்கப்பட்டது மற்றும் அட்வான்ஸ் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • அனைத்து பெட்டிகளும் தானியங்கு கதவுகள் பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்  (GPS) உடன் கூடிய ஆடியோ மற்றும் விசுவல் பயணிகள் தகவல் பலகை மற்றும் வை-ஃபை பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 15,2019 ஆம் தேதி டெல்லி-கான்பூர்-அலகாபாத்-வாரணாசி வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்