சன்னி லியோன் அப்படி , தர்ஷா குப்தா இப்படி – நடிகர் சதீஷ் விளக்கம்
ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில், சன்னி லியோன் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோரின் ஆடை குறித்து தான் பேசிய பேச்சு சர்ச்சையானதால் நடிகர் சதீஷ் அதைப்பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, நடிகர் சதீஷ்,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார்.இப்பேச்சை இயக்குனர் நவீன்,பாடகர் ஸ்ரீனிவாஸ், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் குறிப்பிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சதீஷ் ,”அது எதார்த்தமாக தனக்கும் தர்ஷா குப்தாவுக்கும் நடந்த உரையாடலே, தவிர பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று தான் கூறவில்லை”என்றும் “ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எந்த உடையையும் உடுத்துவது அவர்கள் சுதந்திரம்”என்றும் விளக்கம் அளித்துள்ளார்.