ராகிங் புகாரில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட்
புகழ் பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் புகாரில் ஏழு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அதில் முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர்கள் மிரட்டி தண்டால் எடுக்க செய்வது,தண்ணீரை பீச்சி அடிப்பது,அரை டவுசருடன் ஓட விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், ஏழு சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.