வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களா.? உண்மையை உடைத்த உதயநிதி…
விஜயின் “வாரிசு” திரைப்படமும், அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.
இதில், துணிவு துணை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே “துணிவு” திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகம் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
மேலும் துணிவுடன் விஜயின் ‘வாரிசு’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் இரண்டு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிகம் திரையரங்குகள் தமிழகத்தில் கிடைக்கும் எனவும், ஒரு சிலர் துணைப் படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் தமிழகத்தில் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.
இதையும் படியுங்களேன்- அண்ணனுக்கு முத்தம் கொடு…. ராபர்ட் மாஸ்டர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!
இதற்கு உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” துணிவு – வாரிசு இரண்டு படங்களுக்கு பாதி – பாதி திரையரங்குகள் கொடுக்கப்படும். இதற்கு முன்பே இதுபோன்ற பேட்ட -விஸ்வாசம் ஆகிய இருபடங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை தான் பெற்றிருந்தது.
இரண்டு படமும் வெற்றிபெற வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை” என தெரிவித்துள்ளார்.