பாஜக கூட்டணி இவர்களோடு தான்.! மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.!
2024 தேர்தலின் போது அதிமுக எந்த வடிவில் இருக்கிறதோ அந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி குறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இபிஎஸ் அல்லது ஓபிஎஸ் என கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அண்ணாமலை, 2024 தேர்தல் சமயத்தில் அதிமுக எந்த வடிவில் இருக்கிறதோ, தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் என்ன விருப்பப்படுகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என பளிச் என பதில் கூறினார்.
மேலும், மக்கள் மத்தியில் திமுக அரசு மீது அதிருப்தி தான் நிலவுகிறது. 40க்கு 40 எல்லாம் திமுகவின் பிரச்சாரம் தான். உண்மைகள் 15 தொகுதி கூட வராது என திமுக அரசின் மீது தனது விமர்சனத்தை முன்வைத்தார் மாநில தலைவர் அண்ணாமலை.