அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான். அனைவருக்கும் படிப்பு கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்.
எங்களிடம் அரசு பள்ளிகள் இருக்கிறது நாங்களும் எதிலும் தரும் சளைத்தவர்கள் அல்ல. எங்களிடம் உள்ள பாடத்திட்டத்தை போலவே சிபிஎஸ்சி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டம் உள்ளது. அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என்பதை நிலைநாட்டுவதற்க்காக தான் உழைத்துக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.