மக்கள் தொகை கணக்கெடுப்பு; கொள்கை முடிவை மக்களுக்காக மாற்றி அமைக்கலாமே – உயர்நீதிமன்றம்
மக்களின் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே என உயர் நீதிமன்ற மதுரையை கிளை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவு போல ஓபிசி அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரையை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரிதியான முடிவு என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை முடிவை மக்களுக்காக மாற்றி அமைக்கலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மதுரையை சேர்ந்த தவமணி தேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், ஓபிசி பிரிவின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கூடாது என எவ்வாறு கூறுகிறீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு கூடுதலாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.