#BREAKING : 10 % இடஒதுக்கீடு தீர்ப்பு..! முதல்வர் ஆலோசனை..!

Default Image

10% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 10% இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 10% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,மூத்த வழக்கறிஞர் வில்சன்,வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில்,  10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்