பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை – ஆர்.பி.உதயகுமார்
நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் குற்றசாட்டு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் பருவமழையை மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பருவமழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வடகிழக்கு பருவ மழையால் உயிரிழந்த 23 பேருக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை.
பயிர் பாதிப்பு, வீடுகள் பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை. தொடர் மழை பெய்தாலும் கூட பல ஏரிகள் வறண்டு போய் உள்ளன. நீர் மேலாண்மையில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.