கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் கூடுதல் பயிர் காப்பீடு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உயர்ந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணி நியமான ஆணைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திமுக ஆட்சிக்கு வந்த பின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 1145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில், நடப்பாண்டில், 5 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
பாதிப்பின் அளவுக்கு ஏற்றவாறு பயிர் காப்பீட்டு தொகை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும், மேலும் தற்போது உயர்ந்து வரும் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.