T20 WorldCup2022: இந்திய அணிக்கு வந்த சிக்கல்! வலைப்பயிற்சியின் போது கேப்டன் காயம்.!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது வலது கையில் காயமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பையில் பரபரப்பான சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று அரையிறுதிப்போட்டிகள் நாளை தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை சிட்னியில் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவ-10 ஆம் தேதி அடிலெய்டில் மோத இருக்கிறது.
இந்த போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் ரன் குவிக்க திணறி வரும் கேப்டன் ரோஹித் சர்மா, நெதர்லாந்துக்கு எதிராக 53 ரன்கள் குவித்ததை தவிர மற்ற போட்டிகளில் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை.
இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கேப்டன் ரோஹித்துக்கு, பந்து வீசும்போது அது வலது கையில் பட்டு அவர் காயமடைந்தார், பயிற்சியில் பாதியிலிருந்து விலகினார். வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மீண்டும் பயிற்சியை தொடர்ந்தார். அதன்பின் தான் அணிக்கு மீண்டும், கவலை தீர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது வரை இந்திய அணியில் கோலி, சூரியகுமார், ஹர்டிக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் நல்ல ஃபார்மில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். முதல் அரையிறுதியில் இந்தியா நவ-10 இல் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது, இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாவும் தன் அதிரடியைக் காட்டி ரன்கள் குவிக்கும் பட்சத்தில் இந்திய அணி பெரிய ஸ்கோரை குவிக்கும்.
T20 WC: Rohit Sharma escapes injury after being hit on hand during practice ahead of Semi-Finals
Read @ANI Story | https://t.co/LspCUco5fc#RohitSharma???? #T20WorldCup2022 #Cricket pic.twitter.com/M7vdi8vDga
— ANI Digital (@ani_digital) November 8, 2022