‘Blood Moon’ – இன்று சந்திர கிரகணம்…! இனி 3 ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது…!
இன்று சந்திர கிரகணம் தோன்ற உள்ளது.
சந்திர கிரகணம் சூரியன், பூமி மற்றும் நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்று சந்திர கிரகணம் தோன்ற உள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்று தோன்றும் சந்திர கிரகணமானது, அடுத்த 3 ஆண்டுகளுக்கு முழு சந்திர கிரகணம் நிகழாது. எனவே இந்த சந்திர கிரகணத்தை விஞ்ஞானிகள் உட்பட பலரும் காண்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.
சந்திர கிரகணம் , இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணி வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணமானது பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை நீடிக்கும். கிரகணத்தின் போது நிலவு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதனால் இது Blood moon என்று அழைக்கப்படுகிறது.
இந்த முழு சந்திர கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த கிரகணத்தை தொலைநோக்கிகள் கொண்டு பார்த்தால் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனர்.